கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்


கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
x

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் நாளை முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகின்றன.

சென்னை,

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் நாளை முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகின்றன. இதனால் விடுமுறைக்கு வெளியூர் சென்றிருந்தவர்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கியிருக்கிறார்கள். அதேபோல், வெளியூர்களுக்கு வந்தவர்களும் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இதனால், சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் மிகுதியாக இருந்ததை பார்க்க முடிந்தது.

பயணிகள் கூட்டத்தை கணக்கில் கொண்டு சிறப்பு பேருந்துகளையும் இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பதாக பயணிகள் தெரிவித்தனர். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வர ஏசி படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் 3,000- வரையும் சாதாரண சொகுசு பேருந்துகளில் 2,500 வரையும் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டினர்.


Next Story