கடைத்தெருக்களில் அலைமோதிய கூட்டம் - உயர் கோபுரம் அமைத்து போலீசார் கண்காணிப்பு


கடைத்தெருக்களில் அலைமோதிய கூட்டம் - உயர் கோபுரம் அமைத்து போலீசார் கண்காணிப்பு
x

தீபாவளி பண்டிகையை ஒட்டி சிவகங்கையில், கடைத்தெருக்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

சிவகங்கை,

தீபாவளி பண்டிகையை ஒட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், கடைத்தெருக்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

முக்கிய சாலையான செக்காலை சாலையில் இருந்து பெரியார் சிலை வரையிலும் சாலையின் இரு ஓரங்களிலும் நூற்றுக்கணக்கான கடைகள் புதிதாக அமைக்கப்பட்டு, துணிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு பொருட்களை வாங்குவதற்காக திரளான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க உயர் கோபுரம் அமைத்து போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story