பூஜை பொருட்கள் வாங்க கடைவீதியில் அலைமோதிய மக்கள் கூட்டம்


பூஜை பொருட்கள் வாங்க கடைவீதியில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 17 Sep 2023 6:45 PM GMT (Updated: 17 Sep 2023 6:47 PM GMT)

விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்கள் வாங்க கடைவீதியில் அலைமோதிய மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்கள் வாங்க கடைவீதியில் அலைமோதிய மக்கள் கூட்டம் அலைமோதியது.

விநாயகர் சதுர்த்தி

விநாயக பெருமான் அவதரித்த நாளே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. வளர்பிறை சதுர்த்தி நாளன்று இந்த விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீடுகள் மற்றும் பொதுஇடங்களில் பிரதிஷ்டை செய்து கொழுக்கட்டை, பொரி, சுண்டல், தேங்காய், பழம், கரும்பு உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்து மக்கள் வழிபாடு செய்வார்கள்.

பின்னர் 3 அல்லது 5 நாட்கள் கழித்து வாணவேடிக்கையுடன் மேள தாளங்கள் முழங்க விநாயகரை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமான ஒன்றாகும்.

விற்பனை அமோகம்

இந்த நிகழ்வானது ஆண்டு தோறும் இந்துக்களால் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திட்டச்சேரி, திருமருகல் கடைவீதியில் வாழைத்தார், வாழைப்பழம், பூசணிக்காய் போன்றவை குவித்து வைக்கப்பட்டிருந்தன.

அவல், பொட்டுக்கடலை, பொரி விற்பனை கடைகளிலும், பூக்கடை மற்றும் காய்கறி கடைகளிலும் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதனால் மேற்கண்ட கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


Next Story