நெல்லையில் ரெயில், பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது


நெல்லையில் ரெயில், பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது
x

பொங்கல் பண்டிகைக்காக வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு வந்ததால் நேற்று நெல்லையில் பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

திருநெல்வேலி

பொங்கல் பண்டிகைக்காக வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு வந்ததால் நேற்று நெல்லையில் பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட வெளியூர்களில் வசிக்கும் நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்காக சென்னையில் இருந்து நேற்று முன்தினம் நெல்லைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கூட்டம் அலைமோதியது

இந்த பஸ்களில் சென்னையில் இருந்து நெல்லைக்கு தங்கள் குடும்பத்துடன் ஏராளமானவர்கள் வந்தனர். இதனால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நேற்று காலை 7 மணிக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசி, சுரண்டை, பாவூர்சத்திரம், முன்னீர்பள்ளம், தாழையூத்து, மானூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்களில் அவர்கள் ஏறி சென்றனர். இதனால் அந்த பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ரெயில் நிலையம்

இதேபோல் சென்னையில் இருந்து நெல்லை- நாகர்கோவில் செல்லுகின்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் ஏராளமான மக்கள் வந்து இறங்கினார்கள்.

இதனால் ரெயில் நிலையத்திலும் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

செங்கோட்டை ரெயில்

நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாலை அணிந்து, பொங்கலன்று சாமி தரிசனம் செய்வதற்காக பாதயாத்திரையாக செல்கிறார்கள்.

அவர்களுடைய குடும்பத்தினர் திருச்செந்தூர் செல்வதற்காக நேற்று காலையில் செங்கோட்டையில் இருந்து நெல்லை வந்த ெரயிலில் ஏறி வந்தனர்.

இதனால் செங்கோட்டை ரெயிலில் நேற்று கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. காலை 8-45 மணியளவில் இந்த ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது நெல்லை சந்திப்பு 5-வது பிளாட்பாரத்தில் திருச்செந்தூர் செல்லக்கூடிய மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.


Related Tags :
Next Story