சி.ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி நிறைவு விழா


சி.ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி நிறைவு விழா
x
தினத்தந்தி 1 July 2023 1:30 AM IST (Updated: 1 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

சி.ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி நிறைவு விழா

கோயம்புத்தூர்

துடியலூர்

துடியலூரை அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையத்தில் சி.ஆர்.பி.எப். பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு பயிற்சி பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்களின் (சப்-ஆர்டினெட் ஆபிசர்ஸ்) பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 341 சப்-இன்ஸ்பெக்டர்கள் நேரடியாக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் கோவை சி.ஆர்.பி.எப். முதல்வர்அஜய் பரதன் வரவேற்றார். சி.ஆர்.பி.எப். பயிற்சி கல்லூரியின் இயக்குனர்டி.ஜி.பி. சுஜய் லால் தவுசன் தலைமை தாங்கி, பயிற்சி முடித்த 341 பேருக்கு சான்றிதழை வழங்கினார். ரேங்க் அடிப்படையில் 6 பேருக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது.

இங்கு பயின்ற வீரர்கள் குண்டு வீச்சு, அணுக்கதிர் வீச்சு, இயற்கை, செயற்கை அழிவுகளில் கதிர் வீச்சால் உண்டாகும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான பயிற்சிகளை முறையாக பெற்றது குறிப்பிடத்தக்கது. பின்னர் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கமெண்டண்ட் ராஜேஷ் குமார், அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story