கடலூர்: திட்டக்குடி அருகே ஆவட்டி கூட்டு ரோட்டில் கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு


கடலூர்: திட்டக்குடி அருகே ஆவட்டி கூட்டு ரோட்டில் கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு
x

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி கூட்டு ரோட்டில் கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்தில் நான்கு பேர் பலியாகினர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி கூட்டு ரோட்டில் கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்தில் நான்கு பேர் பலியாகினர். இரண்டு பெண்கள் ஒரு குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். முன்னால் சென்ற கார் மீது வேகமாக வந்த அரசு பேருந்து மோதியுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த நான்கு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியகியுள்ளது.


Next Story