ஊட்டியை போன்று மாறிய கடலூர்


ஊட்டியை போன்று மாறிய கடலூர்
x
தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-10T00:16:49+05:30)

கடும் பனிப்பொழிவால் ஊட்டியை போன்று கடலூர் மாறியது.

கடலூர்


தை மாதப்பனி தலையை பிளக்கும் என்பார்கள். அதை மெய்ப்பிக்கும் விதமாக தற்போது கடலூரில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை 7 மணியை கடந்தும் பனிபடர்ந்து, ஊட்டியை போன்று குளிர் நடுங்க செய்தது. இதில், கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள கும்தாமேடு் தரைப்பாலத்தில் பனிசூழ்ந்து எதிரே உள்ள கரையே தெரியாத வகையில் பனியின் தாக்கம் இருந்ததை படத்தில் காணலாம்.


Next Story