சாகுபடி பரப்பளவு குறைந்து விட்டதா?
சாகுபடி பரப்பளவு குறைந்து விட்டதால் தக்காளி, சின்ன வெங்காயம் விலை உயர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.
விவசாயம்
தன்னலம் கருதாமல் பொதுநலம் கருதும் மக்கள் உள்ளநாடு உலகில் தலைநிமிர்ந்து நிற்கும். ஆனால் என்னவோ அப்படி பட்ட உத்தம சீலர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது உண்மை. காய்கறி விலை உயர்ந்தால் கவலைப்படும் பொதுமக்கள், விவசாயிகள் விளைய வைத்த பொருட்கள் விற்பனையாகாமல் குப்பையில் கொட்டும்போது சாதாரணமாக கடந்து போகிறார்கள். விவசாயியை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அவர்களைப்பற்றி கவலைப்படவும் நேரம்போதவில்லை.
விவசாயத்திற்கு தேவையான அனைத்து இடுபொருட்களின் விலையும் உச்சம் தொட்ட நிலையில்.. விளைபொருட்களுக்கு எப்போதாவது ஒருமுறைதான் விலை கிடைக்கிறது. அதுவும் எப்போதும் கிடைப்பதில்ைல.
சாகுபடி பரப்பளவு
தற்போது தக்காளி, சின்னவெங்காயம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் அதன் சாகுபடி பரப்பளவு குறைந்து விட்டது. . உலகத்தை இயக்குகின்ற அச்சாணியாக விளங்கும் உணவுப் பொருள் உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்பட்டால் ஒருநாள் எட்ட முடியாத அளவுக்கு விலை உயர்ந்து உச்சத்தில் நிற்கும். அந்த நிலை தான் தற்போது நிகழ்ந்து உள்ளது.
அடுத்த தலைமுறை விவசாயி உருவாகவில்லை என்றால் அடுத்தடுத்த தலைமுறையும் ஆரோக்கியமான உணவைக் கொண்டு பூமியில் வாழ்வதற்கான சூழல் இருக்காது.
ஷேர் மார்க்கெட், தங்கம், வங்கியில் முதலீடு வைப்பு தொகை செய்வதை விட்டு விட்டு உயிர் காக்கும் உணவை அளிக்கும் விவசாயத்தில் முதலீடு செய்து விவசாயத்தை காப்பாற்ற முன் வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.