சின்ன வெங்காய விதை சாகுபடி தீவிரமாக செய்துவருகின்றனர்


சின்ன வெங்காய விதை சாகுபடி தீவிரமாக செய்துவருகின்றனர்
x

சின்ன வெங்காய விதை சாகுபடி தீவிரமாக செய்துவருகின்றனர்

திருப்பூர்

குண்டடம்

சின்ன வெங்காய விதை சாகுபடி தீவிரமாக செய்துவருகின்றனர்

இது பற்றி விவசாயிகள் தரப்பில் கூறும்போது:-

குண்டடம், காங்கயம், தாராபுரம், ஐல்லிபட்டி, குடிமங்கலம், பெரியபட்டி, உடுமலை ஆகிய பகுதிகளில் அதிகளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மழைக்காலம் தவிர இதர சீசன்களில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் நாற்று நடவு, காய் நடவு என 2முறைகளில் நடவு செய்யப்படுகிறது. இதில் நாற்று நடவு முறையில் நடவு செய்ய வெங்காய விதையை நாற்றங்காலில் முளைக்க வைத்து 50நாள் ஆன பின்பு நடவு செய்யப்படுகிறது. நாற்று நடவு அனைத்து சீதோஷ்ன நிலையிலும் வளரும் என்பதால் விவசாயிகள் அதிகம் நாற்று நடவு முறையையே விரும்புகின்றனர். கடந்த 10வருடங்கள் முன்பு வரை கர்னாடகா, மகாராஷ்ட்ரா மாநிலங்களிலிருந்து விதை கொண்டுவரப்பட்டு விதை விற்பனையார்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் குண்டடம் பகுதியில் விவசாயிகளே வெங்காய பூக்களிலிருந்து விதை உற்பத்தி செய்யும் முறையை தெரிந்து விதை உற்பத்தியில் இறங்கினர். சில விவசாயிகள் டன் கணக்கில் விதை உற்பத்தி செய்து சான்று பெற்று விற்பனையும் செய்து வந்தனர்.

கடந்த சீசனில் மழைக்கு தப்பி உற்பத்தி செய்யப்பட்ட குறைந்த அளவிலான விதைகள் தட்டுப்பாடு காரணமாக கிலோ ரூ.10ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது மேலும் வெங்காய வியாபாரிகள் சிலர் வெளியூர்களிலிருந்து விதைகளை வாங்கி வந்து கிலோ ரூ.10ஆயிரத்துக்கும் அதிகமாக விற்பனை செய்தனர்.

கடந்த சீசனில் விதைகளின் விலை ஏற்றத்தால். நடப்பாண்டில் குண்டடம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விதைக்கான வெங்காயம் நடவு செய்யப்பட்டு நன்கு வளர்ந்து பூக்கள் பூத்திருக்கிறது. பூக்களில் விதைகள் முற்றத் தொடங்கிய நிலையில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது

இதனால் கார்த்திகை பட்டத்தில் வெங்காய நடவுக்கு விதைக்கான தட்டுப்பாடு இருக்காது விதைகளின் விளையும் குறைவாக இருக்கும் மேலும் விதைகள் வாங்கி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அருவாடையின் போது சின்ன வெங்காயதிற்குக்கு நல்ல விலை கிடைத்தால் சீரான லாபம் கிடைக்கும் என இவ்வாறு கூறினார்



Next Story