கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் உழவார பணி


கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் உழவார பணி
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் உழவார பணி நடைபெற்றது.

கடலூர்

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பெருவிழா சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி 63 நாயன்மார் அமைப்பு சார்பில் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று காலை உழவார பணி நடைபெற்றது. இதில் ராமலிங்கம் தலைமையில் பணியாளர்கள் கோவில் கொடிமரம், கோவிலின் சுற்றுச்சுவர், சாமி வீதி உலா செல்லக்கூடிய வாகனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதையும் சுத்தம் செய்தனர். இதில் கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story