கலை இலக்கிய சங்கத்தின் சார்பில் பண்பாட்டு இரவு விழா


கலை இலக்கிய சங்கத்தின் சார்பில் பண்பாட்டு இரவு விழா
x
தினத்தந்தி 22 Aug 2023 12:45 AM IST (Updated: 22 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கலை இலக்கிய சங்கத்தின் சார்பில் பண்பாட்டு இரவு விழா நடந்தது

சிவகங்கை

சிவகங்கை

தமிழ்நாடு கலை இலக்கிய சங்கத்தின் முதலாவது கலை இலக்கிய பண்பாட்டு இரவு விழா சிவகங்கையில் நடைபெற்றது. இதையொட்டி சிவகங்கை ராமச்சந்திரனார் பூங்காவில் இருந்து மாவட்ட தலைவர் சரோஜினி தலைமையில் தொடங்கிய பேரணியை ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் குமரேசன் தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக வந்து சண்முகராஜா கலையரங்கில் நிறைவடைந்தது. பண்பாட்டு இரவு நிகழ்ச்சிக்கு பாண்டிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.ஒமேகா கண்ணன் வரவேற்று பேசினார். விழாவில் சிவகங்கை நகர்மன்ற துணை தலைவர் கார்கண்ணன் மற்றும் செல்வகுமார், தமிழ் ஆசிரியர் இளங்கோ சங்கர சுப்பிரமணியன், காயத்ரி மகதி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள், 10, 12-ம் வகுப்புகளில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் ரத்தினம் நன்றி கூறினார். தொடர்ந்து விடிய விடிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

1 More update

Next Story