கலெக்டர் அலுவலகம் முன்பு குருமன்ஸ் மக்கள் சார்பில் கலாசார நிகழ்ச்சி

கலெக்டர் அலுவலகம் முன்பு குருமன்ஸ் மக்கள் சார்பில் கலாசார நிகழ்ச்சி
x

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு குருமன்ஸ் மக்கள் சார்பில் கலாசார நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு குருமன்ஸ் மக்கள் சார்பில் கலாசார நிகழ்ச்சி நடந்தது.

உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த குருமன்ஸ் மக்கள் சார்பில் கலக்டர் அலுவலகம் முன் பாரம்பரிய கலாசார நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலையில் உள்ள குருமன்ஸ் மடத்தின் தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

அப்போது குருமன்ஸ் இன மக்கள் பாரம்பரிய கலாசாரத்தை விளக்கும் வகையில் தப்பு அடித்துக் கொண்டு தலையில் தேங்காய் உடைத்து நடனம் ஆடினர். இதனை பொதுமக்கள் பலர் கண்டு ரசித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது பரபரப்பாக காணப்பட்டது.

1 More update

Next Story