கறிக்கோழி கிலோவுக்கு ரூ.4 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.4 உயர்ந்தது.
நாமக்கல்
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.4 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.112 ஆக அதிகரித்து உள்ளது.
முட்டை கொள்முதல் விலை 490 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.106 ஆகவும் நீடித்து வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர். நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story