ஆபாச பேச்சை தட்டிக்கேட்ட அண்ணன் தம்பிக்கு பிளேடு வெட்டு

ஆபாச பேச்சை தட்டிக்கேட்ட அண்ணன் தம்பிக்கு பிளேடு வெட்டு விழுந்தது.
ஆம்பூர் மாங்காத் தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் அப்ரேஸ் (வயது 31), தப்ரேஸ் (29). அண்ணணன்- தம்பிகளான இவர்கள் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அஷ்வாக் (22) என்பவர் மது போதையில் ஆபாசமாக பேசியபடி தெருவில் சென்றுள்ளார். இதனை தப்ரேஸ் தட்டிக் கேட்டதாக தெரிகிறது. இதனால் தப்ரேஸ் மற்றும் அஷ்வாக் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை அப்ரேசும் தட்டி கேட்டு உள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த அஷ்வாக் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தப்ரேஸ் மட்டும் அப்ரேசை வெட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அஷ்வாக்கின் தந்தை அல்தாப் (50) என்பவரும், சகோதரர்கள் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தப்ரேஸ் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குக்பதிவு செய்து அஷ்வாக் மற்றும் அவரது தந்தை அல்தாப் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






