கள்ளக்காதலி வீட்டில் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை - பரபரப்பு


கள்ளக்காதலி வீட்டில் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை - பரபரப்பு
x

ஏர்வாடி அருகே கள்ளக்காதலி வீட்டில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே கள்ளக்காதலி வீட்டில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கூலி தொழிலாளி

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்தவர் பிரவீன்ராஜ் (வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கும், ஏர்வாடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நேற்று முன்தினம் இரவில் அந்த பெண்ணின் வீட்டுக்கு பிரவீன்ராஜ் சென்றார். அப்போது அவருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த பெண், பிரவீன்ராஜை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை பூட்டினார்.

கழுத்தை அறுத்து தற்கொலை

இதனால் மனமுடைந்த பிரவீன்ராஜ் கத்தியால் தனது கழுத்தை தானே அறுத்து கொண்டும், வயிற்றிலும் குத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி பிரவீன்ராஜ் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏர்வாடி அருகே கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story