முதல் அமைச்சர், அமைச்சர்கள் குறித்து அவதூறு- 386 வீடியோக்களை நீக்க யூடியூபிற்கு சைபர் கிரைம் காவல்துறை நோட்டீஸ்..!


முதல் அமைச்சர், அமைச்சர்கள் குறித்து அவதூறு- 386 வீடியோக்களை நீக்க யூடியூபிற்கு சைபர் கிரைம் காவல்துறை நோட்டீஸ்..!
x

மேலும் 61 கடன் செயலிகளை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை நீக்க யூடியூப்க்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக தமிழக காவல் துறையின் சைபர் கிரைம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சைபர் கிரைம் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமூக வலைதளங்களில், தமிழக ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டில், இதுவரை 40 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை தடை செய்ய யூடியூப்-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 221 சட்டவிரோத கடன் செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும் 61 கடன் செயலிகளை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story