பேக்கரியில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து


பேக்கரியில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து
x

பேக்கரியில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

புதுக்கோட்டை

மணமேல்குடி கடைவீதியில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பேக்கரி உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டு விற்பனை செய்யப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது. இதில் தீ மளமளவென பரவியது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் பேக்கரியில் இருந்த பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணமேல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.


Next Story