வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு..!


வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு..!
x
தினத்தந்தி 1 Oct 2023 6:57 AM IST (Updated: 1 Oct 2023 2:05 PM IST)
t-max-icont-min-icon

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்துள்ளது.

சென்னை,

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, மாதத்தின் முதல் நாள் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து அறிவிக்கின்றனர்.

அந்த வகையில் அக்டோபர் ஒன்றாம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.203 உயர்த்தி உள்ளன. அதன்படி சென்னையில் ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்து ரூ.1,898-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

1 More update

Next Story