தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு - இரண்டாம் சுற்று நிறைவில் இதுவரை 20 பேருக்கு காயம்


தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு - இரண்டாம் சுற்று நிறைவில் இதுவரை 20 பேருக்கு காயம்
x

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தச்சங்குறிச்சி,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் போதுமான முன்னேற்பாடுகள் இல்லாததால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், விழாக்குழுவினருடன் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தங்கக்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி,, மெய்யநாதன் மற்றும் மாவட்ட கலெக்டர் கவிதா தொடங்கி வைத்தனர்.

ஜல்லிக்கட்டில் இதுவரை இரண்டாம் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், தற்போதுவரை 20 மாடுபிடி வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டில் பெற்றி பரும் வீரர்களுக்கு பைக்குகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story