தினத்தந்தி புகார்


தினத்தந்தி புகார்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

நிழற்குடை அமைக்கப்படுமா ?

கரூர் மாவட்டம், வெள்ளியணை பஸ் நிறுத்த பகுதியானது சுற்றுப் பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்களும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளும் கரூருக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலைக்கு செல்வோரும் காத்திருந்து பஸ் ஏறி செல்லக்கூடிய ஒரு பகுதியாகும் . அகலப்படுத்தப்பட்ட சாலையில் இந்த பஸ் நிறுத்த பகுதியில் பாளையம்,திண்டுக்கல், காணியாளம்பட்டி, தரகம்பட்டி,மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்ப்புறத்தில் கரூர் தாந்தோணிமலை செல்ல காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்குடை எதுவும் அமைக்கப்படவில்லை .இதனால் இங்கு காத்திருக்கும் பயணிகள் வெயில் , மழை போன்றவற்றிலிருந்து தங்களை காத்து கொள்ளவும் ,வயதானவர்கள் கர்ப்பிணிகள் நோயாளிகள் அமர்ந்திருந்து பஸ் ஏறிச் செல்ல முடியாத நிலையில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மிகவும் விசாலமான முறையில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.

கார்த்தி, வெள்ளியணை

தொட்டுவிடும் உயரத்தில் மின்கம்பி

கரூர் மாவட்டம், மணவாடி ஊராட்சி கல்லுமடை பஸ் நிறுத்தத்தில் இருந்து சிறிது தொலைவில் அய்யம்பாளையம் காலனி பகுதி அருகே 2 மின் கம்பங்களுக்கு இடையே செல்லும் மின்கம்பியானது மிகவும் தாழ்வாக தொட்டுவிடும் உயரத்தில் செல்கிறது. கரூர் வெள்ளியணை சாலை ஓரத்தில் செல்லும் இந்த மின் கம்பியில் வாகனங்கள் கவனக்குறைவால் மோதினால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அந்த பகுதியில் புதிதாக மின் கம்பம் ஒன்று நட்டு மின் கம்பியின் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும். கேட்டுக்கொள்கிறோம்.

பழனிச்சாமி, கல்லுமடை.

குகை வழிப்பாதை அமைத்துத் தரப்படுமா?

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே மரவாபாளையம் வழியாக ரெயில்வே பாதை செல்கிறது. இந்த பாதையின் அருகாமையில் உள்ள நாடார்புரம், மகாத்மா காந்தி நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வெளி இடங்களுக்கு சென்று படித்து வருகிறனர் . இதனால் அவர்கள் ரெயில்வே பாதையை கடந்து சென்று வருகின்றனர். அதேபோல் பொதுமக்களும் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வாகனங்கள் அவசர தேவைக்கு சென்று வருவதற்கு வழிகள் இல்லை. இதனால் புங்கோடை வழியாக பல கிலோமீட்டர் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே ரெயில்வே பாதையின் அடியில் குகை வழி பாதை அமைத்து தரவேண்டும்.

பொதுமக்கள், மரவாபாளையம்

பாலத்தில் ஏற்பட்ட பள்ளம்

கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம்- பரமத்தி வேலூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த சுமார் 70 ஆண்டுக்கு முன் புதிய பாலம் கட்டப்பட்டது. இதன் காரணமாக பாலத்தின் குறுக்கு நெடுகிலும் பள்ளங்கள் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் தடுமாறி செல்கின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தில் உள்ள பெரிய குழியாக இருப்பதால் நிலை தருமாறி குழியில் விட்டு கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழும்போது பெரிய வாகனங்கள் வரும் போது பெரும் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுப்பணித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைத்து விபத்துக்கள் நடக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தவிட்டுப்பளையம்

வாய்க்காலில் தேங்கி நிற்கும் தண்ணீர்

கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் , மரவாபாளையம், சேமங்கி ,முத்தனூர், கோம்புப்பாளையம் ,திருக்காடுதுறை, பாலத்துறை ,தோட்டக்குறிச்சி, தளவாபாளையம் வழியாக புகளூர் வாய்க்கால் செல்கிறது. வாய்க்கால் தண்ணீரில் ஏராளமான தண்ணீர் தாமரைகள் மற்றும் பல்வேறு செடி ,கொடிகள் சென்று பாலத்துறை பகுதியில் உள்ள பாலத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் வாய்க்கால் தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல முடியாமல் உள்ளது. அதனால் கடைமடை வரை தண்ணீர் சென்று விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடிக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்த்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், தளவாபாளையம்


Next Story