தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

குரங்குகள் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெம்பாவூர், வடகரை ஆகிய ஊர்களுக்கு இடையில் ஆறு ஒன்று உள்ளது. இந்த ஆற்றின் கரைப்பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றனர். இந்த குரங்குகள் அனைத்தும் வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள சமையல் பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச்சென்று விடுகின்றது. மேலும் கடைகளில் உள்ள பொருட்களை எடுத்துச்சென்று விடுகின்றது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வெம்பாவூர்.

குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி

பெரம்பலூர் உன் மங்கூன் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதி பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் குறைவாக வருகிறது. இதனால் கடும் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பநந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

கழிவுநீரால் துர்நாற்றம்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் இருந்து சுந்தரம் நகர் செல்லும் சாலையில் பாதாள சாக்கடையில் கழிவுநீர் நிரம்பி வெளியே செல்கிறது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. மேலும் துர்நாற்றம் வீசி நோய்பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் அதனை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

சேதமடைந்து கிடக்கும் கட்டிட சுவர் ?

பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு வந்து செல்லும் நுழைவு வாயில் பகுதியில் மேற்பகுதி சேதமடைந்த சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே அவற்றை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பெரம்பலூர்.


Next Story