தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கி நிற்கும் கழிவுநீர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடி காடு பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 6-வது வார்டில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வெள்ளாற்றில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர் கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், லப்பைக்குடி காடு
குடிநீர் தொட்டி சேதம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியம், புதுவேட்டக்குடி நால்ரோடு பஸ் நிறுத்தம் அருகே ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து பலமாதம் ஆகிறது. எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை மாற்றி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், புதுவேட்டக்குடி.
போக்குவரத்து நெருக்கடி
பெரம்பலூர் மாவட்டம், ஆத்தூர் சாலையில் இருந்து வடக்கு மாதவி சாலையில் நுழையும் இடத்தில் இடத்தில் எப்போதுமே போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்தும் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
தெரு நாய்கள் தொல்லை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியதிக்கு உட்பட்ட நமையூர் கிராமத்தில் வசந்த் நகர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தெரு நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்வோர் பின்னால் துரத்தி சென்று கடிக்க வருகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பெண்கள், முதியவர்கள் சாலையில் நடக்க முடியவில்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
கிருபா, நமையூர்