தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை வசதி வேண்டும்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருவெள்ளறை கிராமத்தில் வட ஜம்புநாதர் கோவில் உள்ளது. இந்தநிலையில் கோவிலுக்கு செல்லும் துறையூர்-திருச்சி பிரதான சாலையில் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவு மண் சாலையாக உள்ளது. இதனால் அந்த கோவிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மண்சாலையை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ்ப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவெள்ளறை
எரியாத தெருவிளக்குகளால் அவதி
திருச்சி மாவட்டம், சென்னக்கரை கிராமத்தில் வாத்தலையில் இருந்து சென்னகரை செல்லும் புள்ளம்பாடி வாய்க்காலின் கரையில் தெருவிளக்குகள் உள்ளன. இந்த தெருவிளக்குகள் கடந்த 3 மாதமாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ சந்துகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், சென்னகரை.
சாலையை அகலப்படுத்த கோரிக்கை
திருச்சி நெநம்பர்-1 டொல்கேட் பகுதியில் சமயபுரம் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பகுதி சாலையில் வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்காலால் அந்த சாலை குறுகலாக உள்ளது. இந்த அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை அகலப்படுத்தி, அந்த பகுதியில் 2 தரைப்பாலம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பாலு, போத்தனூர்
ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணி
திருச்சி நெம்பர் -1 டோல்கேட்டில் இருந்து லால்குடிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனால் டோல்கேட்டில் இருந்து லால்குடி செல்வதற்கு சாலை அமைக்கும் பணி கடந்த 5 மாதங்களாக முன்பு தொடங்கப்படடு இன்னும் பணி முடியவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோமாகுடி, ஆசைத்தம்பி
தெருநாய்கள் தொல்லை
திருச்சி மாநகராட்சி டி.வி.எஸ்.டோல்கேட், உலகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.