தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர் மாவட்ட தினத்தந்தி புகார் பெட்டி செய்திகள் விவரம் வருமாறு:-
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
அரியலூர்-செந்துறை சாலை காமராஜ் நகரில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் இங்கு குப்பைகள் மலைபோல் குவிந்து காட்சியளிக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் இந்த குப்பைகளை சாலையில் செல்லும் கால்நடைகள் மற்றும் நாய்கள் கிளறிச்செல்கின்றன. இதனால் குப்பைகள் சாலையில் பறக்கின்றன. நாய்கள் சாலையின் குறுக்கே ஓடுவதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
எரியாத மின் விளக்குகள்
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியாமல் உள்ளதால் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.