தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

பெரம்பலூர் மாவட்ட தினத்தந்தி புகார் பெட்டி செய்திகள் விவரம் வருமாறு:-

பெரம்பலூர்

தொடர் திருட்டு ஒழிக்கப்படுமா?

பெரம்பலூரில் கடந்த ஒரு வாரமாக தினம் ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த திருட்டு சம்பவத்தினால் பெரம்பலூர் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பகலில் கூட பெண்கள் நடந்து செல்வதற்கு பயப்படும் சூழ்நிலை உள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாலத்தில் முளைத்த மரச்செடி

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பெரம்பலூர் பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலை திரும்பும் இடத்தில் நெடுஞ்சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்டால் மேம்பாலத்தில் மரச்செடி வளர்ந்து வருகிறது. இதனால் பாலத்தின் திறன் வலுவிழக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

1 More update

Next Story