தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம்

திருச்சி மாவட்டம், துறையூர் பாலக்காட்டு மாரியம்மன் கோவில் தெரு நுழைவு வாயில் உள்ள பெரிய சாக்கடை சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், துறையூர்.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம் , அதவத்தூர் கிழக்கு அல்லித்துறை, வன்னியம்மன் நகரில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் மழை காலங்களில் சாலைகள் சேறும், சகதியுமாக மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருண், அல்லித்துறை, திருச்சி.

வீணாகும் குடிநீர்

திருச்சி மாவட்டம், ஶ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மாநகராட்சி சார்பில் போடப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஸ்ரீரங்கம், திருச்சி.

சாலை வசதி இல்லாமல் அவதி

திருச்சி காட்டூர் கோகுல் நகர், சக்தி நகர் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் சாலை வசதிகள் இல்லாமல் கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பாஸ்கரன், காட்டூர் கோகுல் நகர், திருச்சி


Next Story