தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் , அரசர்குளம் தென்பாதி ஊராட்சிக்குட்பட்ட அண்ணா சாலை பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீது மின்கம்பிகள் உரசி வருகிறது. இதனால் பெரும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அரசர்குளம் தென்பாதி, புதுக்கோட்டை.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், நத்தம் பண்ணை ஊராட்சி சிப்காட் நகர், மருதுபாண்டியர் நகர், சண்முக நகர், செல்வா நகர் , ராஜலட்சுமி நகர் , ஏகமை ஆட்சி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் நடக்கவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தீபா பிரபு, மருபாண்டியர் நகர், புதுக்கோட்டை.


Next Story