தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

பாதாள சாக்கடை அமைக்கப்படுமா?

திருச்சி கிராப்பட்டி மற்றும் எடமலைப்பட்டிபுதூர் பகுதிகளில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியே செல்ல முறையாக பாதாள சாக்கடை அமைக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பகுதிகளில் பாதாள சாக்கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்.

தியாகராஜன், எடமலைப்பட்டிபுதூர், திருச்சி

பொதுக்கழிவறையில் துர்நாற்றம்

திருச்சி மகாத்மாகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இங்குள்ள ஆண், பெண்களுக்கான பொதுக்கழிவறையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுக்கழிவறையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொதுமக்கள், திருச்சி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்சி தில்லைநகர் 6-வது கிராஸ் பகுதியில் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றமும் அதிகளவில் வீசி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அலெக்ஸ், திருச்சி.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா கீரிப்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் முதல் செல்லாண்டியம்மன் கோவில் வரை சாலைகளில் சிலர் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர். இதனால் சிமெண்டு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும் ஆக்கிரமிப்புகளால் சிமெண்டு சாலை போடப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், துறையூர். திருச்சி.


Next Story