தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 5 Jun 2022 12:29 AM IST (Updated: 5 Jun 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தேங்கி நிற்கும் கழிவுநீர் அகற்றப்படுமா?

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருச்செந்துறை கிராமம் வெள்ளர் தெருவில் கழிவுநீர் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பாஸ்கரன், திருச்செந்துறை, திருச்சி.

பூட்டியே கிடக்கும் பொதுக்கழிவறை

திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் கட்டப்பட்ட பொதுக்கழிவறை கடந்த சில ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூட்டியே கிடக்கும் பொதுக்கழிவறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

செல்வி, கஞ்சநாயக்கன்பட்டி, திருச்சி.

முறையாக குடிநீர் வழங்க கோரிக்கை

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், டி.புதுப்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு காவிரி குடிநீர் 8 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் நள்ளிரவு நேரத்தில் திறந்து விடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பகல் நேரங்களில் முறையாக குடிநீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

விஷ்ணு, டி.புதுப்பட்டி, திருச்சி.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், நியூ டவுன் முத்துநகர் 2-வது தெருவில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், குழந்தைகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் ஆங்காங்கே போடப்பட்டுள்ள பாதாள சாக்கடைகளில் இருந்து கழிவுநீரும் வெளியேறி வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

வினோத் சிவம்பிள்ளை, திருவெறும்பூர்.

மின்தடையால் பொதுமக்கள் அவதி

திருச்சி மாவட்டம், முசிறி, அய்யம்பாளையம், மணப்பாளையம், ஏவூர் கொழுந்துரை, அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தபகுதியில் சிறிய மழை மற்றும் காற்று அடித்தாலும் அடிக்கடி தொடர் மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேலும் குறைந்தழுத்த மின்சாரம் வருவதால் மின்சாதன பொருட்களும் சேதம் அடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ஏஞ்சல், முசிறி, திருச்சி.


Next Story