தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்சி சுந்தர் நகர் இந்திரா தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட மண்ணை கழிவுநீர் செல்லும் பாதையில் போட்டு அடைத்து விட்டனர். இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சிராஜ், சுந்தர்நகர், திருச்சி.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம் , அதவத்தூர் கிழக்கு அல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட சாந்தாபுரத்தில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் நடந்து செல்வதற்கே பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ரகுநாத், அல்லித்துறை, திருச்சி.

இதேபோல் திருச்சி அண்ணா இ.எக்ஸ். காலனியில் இருந்து வெண்ணமுத்து பட்டி வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், திருச்சி.

குடிநீர் பற்றாக்குறையால் அவதி

திருச்சி 13-வது வார்டு வடக்கு ஆண்டார் வீதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தினமும் காலையில் 1½ மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே முன்பு காலத்தில் இருந்தபோல் காலை மற்றும் மாலை என 2 வேளைகளில் குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சுவாமிநாதன், திருச்சி


Next Story