தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

ஆபத்தான உயர்மின் கோபுரம்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடியில் செல்போன் உயர்மின் கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படவில்லை. அதன் அருகே குடிசை பகுதிகள் அதிகளவில் உள்ளது. தற்போது இப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் செல்போன் உயர்மின்கோபுரம் கீழே விழுந்தால் மிகப்ெபரிய ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வேப்பங்குடி.

டாஸ்மாக்கடையை மூட கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளி அருகே 4 ரோடு சந்திப்பு இடத்தில் ஒரு டாஸ்மாக்கடை இயங்கி வருகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் மாணவ-மாணவிகள், பஸ் ஏற வரும் பயணிகளும் கடும் அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக பள்ளி அருகே செயல்பட்டு டாஸ்மாக்கடையை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

காசிராஜன், மாத்தூர்.


Next Story