தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், புலியூர், கண்ணாங்குடி, காயாம்பட்டி, வெண்ணமுத்துப்பட்டி மற்றும் திருச்சி மாவட்டம் தேனீர்பட்டி, எஸ்.சர்வீஸ்மேன் காலனி, துவாக்குடி நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வகின்றனர். மேலும், அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், தொழிற்சாலைக்கு செல்லும் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், புலியூர், புதுக்கோட்டை


தெருவிளக்கு வசதி வேண்டும்

புதுக்கோட்டை சிப்காட் நகர், செல்வா நகர், சண்முகா நகர், மருதுபாண்டியர் நகர், குமரன் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதிக்கு ராமேசுவரம்-திருச்சி புறவழிசாலையில் இருந்து எங்கள் பகுதிக்கு செல்லும் சர்வீஸ் சாலையின் கருவப்பிலன் ரெயில் கேட் பகுதியில் போதிய தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக பெண்கள், முதியவர்கள் நடந்து செல்வதற்கே அச்சுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தீபா பிரபு, மருதுபாண்டியர் நகர், புதுக்கோட்டை.


Next Story