தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக மாடுகள் சுற்றித்திரிகிறது. மேலும் இந்த மாடுகளில் சாலையில் படுத்து தூங்குகிறது. சில நேரங்களில் ஒன்றோடு ஒன்று சண்டைப்போட்டு கொள்கிறது. இதனால் இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டிற்கு செல்வோர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெங்கடேஷ், திருச்சி.

வேகமாக செல்லும் பஸ்களால் விபத்து

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரத்திற்கு ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் தினமும் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் அந்த பஸ்களின் டிரைவர்கள் முறையாக பஸ் நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்தாமல் சாலையின் நடுவே நிறுத்தி ஆட்களை ஏற்றி இறக்கி வருகின்றனர். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் அணி வகுத்து நிற்கிறது. மேலும் சில நேரங்களில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் போட்டி போட்டு கொண்டு அதிவேகமாக செல்கிறது. இதனால் சில விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவரஞ்சினி, திருச்சி.

சுத்தமான குடிநீர் வேண்டும்

திருச்சி மாவட்டம், தா.பேட்டையில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகி்ன்றனர். இங்கு காவிரி குடிநீருடன் உப்புதண்ணீர் கலந்து வருகிறது. இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், தா.பேட்டை.


Next Story