தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

சாலையோர ஆக்கிரமிப்புகளால் அவதி

பெரம்பலூர் போஸ்ட் ஆபிஸ் தெரு சாலையோர வியாபாரிகளால் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையோரத்தில் வியாபாரிகளால் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

மது விற்பனையை தடுக்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தண்டலை கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே தினமும் காலை 5 மணியில் இருந்து 12 மணி வரை மது விற்பனை நடக்கிறது. மேலும் இங்கு வந்து மதுகுடிப்பவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், தண்டலை, அரியலூர்.


Next Story