தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 15 Jun 2022 11:21 PM IST (Updated: 15 Jun 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகள்

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலை ஒன்றியம் காவல்காரன்பட்டி பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சார வினியோகம் செய்யும் வகையில் சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்சார கம்பிகள் செல்கின்றன. இந்த நிலையில் மின்கம்பிகளில் மரக்கிளைகள் உரசிக்கொண்டு இருக்கின்றன. இதனால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் கம்பியில் உரசும் மரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், காவல்காரன்பட்டி, கரூர்.

ரெயில்வே மேல்பாலம் இல்லாததால் அவதி

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்திலிருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள புகழூர் வழியாக ரெயில்வே பாதை செல்கிறது. இந்த ரெயில் பாதை வழியாக ஏராளமான ரெயில்கள் அடிக்கடி சென்று வருகின்றன. இதனால் அவ்வப்போது ரெயில்வே கேட் பூட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைத்து அனைத்து வாகனங்களும் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புகழூர், கரூர்.


Next Story