தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய வாரிய அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பத்தை நட்டு வைத்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடிவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

கார்க்கி துவாக்குடி , திருச்சி

சேறும், சகதியுமான சாலை மாற்றப்படுமா?

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் சிங்களாந்தபுரம் கிராமம் சித்தி விநாயகர் நகரில் ஏராளமான பொதுமக்கள் உள்ளது. இந்தநிலையில் துறையூர் பழைய ஆர்.டி.ஓ அலுவலகத்திலிருந்து சிங்களாந்தபுரம் மேற்கு பகுதி வழியாக சித்தி விநாயகர் நகருக்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளதால் மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறி வருகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்லவும் மிகவும் சிரமம் அடைந்து வருகிறனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண் சாலையை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், சிங்களாந்தபுரம், திருச்சி.


பழுதடைந்த குடிநீர் தொட்டி

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் மெயின் ரோடு கணபதி நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடிநீர் தொட்டி பழுதடைந்து கடந்த 3 மாதங்களாக இயக்கவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுந்தடைந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியமங்கலம், திருச்சி.


Next Story