'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கரூர்மாவட்டம், புகழூர் நகராட்சி, வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள், வீடுகளில் சேகரமாகவும் குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், புகழூர், கரூர்.
காவிரி பாலம் சரிசெய்யப்படுமா?
கரூா் மாவட்டம், குளித்தலையில் தந்தைபெரியார் காவிரி பாலம் உள்ளது. இந்த பாலத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பாலத்தின் கட்டிடங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட குளித்தலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முழு பாலத்தையும் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
சுந்தர், குளித்தலை, கரூர்.