தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

சுடுகாட்டிற்கு அடிப்படை வசதி வேண்டும்

திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை ரோட்டில் சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் இங்கு போதிய தண்ணீர் வசதியும், இரவு மின்விளக்கு வசதியும் இல்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் சுடுகாட்டில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

முரளி, சங்கிலியாண்டபுரம், திருச்சி.

குடிநீர் இல்லாமல் அவதி

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குடி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் கடந்த ஒருவாரமாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பருகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடைப்பை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மீனாட்சி, பூலாங்குடி, திருச்சி.

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, பாலக்குறிச்சி ஊராட்சி, சீரங்கம்பட்டி கிராமத்தில் மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சித்ரா, சீரங்கம்பட்டி, திருச்சி.


Next Story