தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

சாலையோர ஆக்கிரமிப்புகளால் அவதி

பெரம்பலூர் போஸ்ட் ஆபிஸ் தெரு சாலையோர வியாபாரிகளால் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையோரத்தில் வியாபாரிகளால் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

சாலை வசதி வேண்டும்

அாியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் காா்குடி கிராமத்தில் இருந்து பிரபல்லம் ஏரி வழியாக நடுவலூர் செல்லும் சாலை உள்ளது. இதில் இருந்து சின்ன ஓடை வரை உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலைவசதி செய்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தா.பழூர்

மேம்பாலம் கட்ட கோரிக்கை

அரியலூர் மாவட்டம், மணக்குடையான் கிராமத்தில் இருந்து பெண்ணாடம், விருத்தாசலம் மற்றும் சிலர் ஊர்களுக்கு செல்ல ஒரே வழி தாமரைப்பூண்டிதான். இந்த வழி சாலையில் உப்பு ஓடை உள்ளது. இந்த சாலையில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்ல முடியவில்லை. மேலும் மழைக்காலங்களில் இந்த ஓடையில் நீர் அதிகமாக வருவதால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபடுகிறது. இந்த பாதையை நம்பி 25 கிராமங்கள் உள்ளன. மேலும் இங்கு 2 சிமெண்ட் ஆலைகள் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமரைப்பூண்டிக்கும், மதுரா நகருக்கும் இடையே தூண் மேம்பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

செந்தில்முருகன், மணக்குடையான், அரியலூர்.


Next Story