தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
உயா்மின் கோபுரம் அமைக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி கிராமத்தில் ஏராளமான ெபாதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தநிைையில் களரம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் ேபாதுமான மின் விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு ேநரங்களில் ெவளியூர்களில் இருந்து வரும் ெபாதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் களரம்பட்டி பஸ் நிறுத்தப்பகுதியில் உயா்மின் ேகாபுரம் அமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என கேட்டுக் ெகாள்கிேறாம்.
ெபாதுமக்கள், களரம்பட்டி.
போக்குவரத்துக்கு இடையூறு
பெரம்பலூரில் முக்கிய பகுதிகளான புதிய, பழைய பஸ் நிலையங்கள், பாலக்கரை, ரோவர் வளைவு, சங்குபேட்டை, காமராஜர் வளைவு, நான்கு ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிசாமி, பெரம்பலூர்.
இணைப்பு சாலை அமைக்கப்படுமா?
பெரம்பலூரில் வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை உள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தையில் நடைபெறுவதால் இருபுறமும் வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின்றன. இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உழவர் சந்தை எளம்பலூர் சாலையை இணைக்கும் வகையில் உழவர் சந்தை அருகே தார் சாலை அமைத்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினால் வடக்கு மாதவியின் சாலையிலிருந்து நகருக்கு மற்றும் வெளி பகுதிகளுக்கு சென்று வரும் வாகனங்களின் ஓட்டுனர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கும், நடந்து செல்லும் பொதுமக்களுக்கு மிகுந்த வசதியாக இருக்கும். இதனை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
தெரு நாய்களை பிடிக்க வேண்டுகோள்
பெரம்பலூர் மாவட்டம், அம்மாப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நாய்கள் சாலையின் மையப்பகுதியில் படுத்து கொள்வதால், மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்வோரை நாய்கள் துரத்தி சென்று கடிக்கிறது. சாலைகளில் நாய்கள் திடீரென்று குறுக்கும், நெடுக்குமாக ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கிழுமத்தூர் ஓலைப்பாடி பகுதியில் 50 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சாலையோரத்தில் பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
சேகர், கிழுமத்தூர், பெரம்பலூர்.