தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அடிப்படை வசதிகள் வேண்டும்
கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் தாலுகா அலுவலகத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. மேலும் பொதுமக்களுக்கு குடிநீர், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. எனவே தாலுகா அலுவலகத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், தரகம்பட்டி
ஆபத்தான மின்கம்பம்
கரூா் மாவட்டம், முருகம்பாளையம் பகுதியில் ஏராளமான ெபாதுமக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள ஒரு இரும்பிலான மின்கம்பத்தின் அடிப்பகுதி தூா்ந்து உடைந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், முருகம்பாளையம்
குடிநீர் வசதி வேண்டும்
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த வடக்கு மேடு பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு பொது குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக பொதுகுடிநீர் தொட்டிக்கு வரும் தண்ணீரானது மின்மோட்டார் பழுது காரணமாக சரிவர வரவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், வடக்குேமடு.
சாக்கடையை தூர்வார கோரிக்கை
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி 24-வார்டு பகுதிகளிலும் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை கடித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடையை தூர்வாரி கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், குளித்தலை
வீணாகும் குடிநீர்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வள்ளுவர் நகரில் தார் சாலை அடிப்பகுதி வழியாக குடிநீர் குழாய் ஒன்று செல்கிறது. இந்தநிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையின் மேல் பகுதி வழியாக வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், வேலாயுதம்பாளையம்