தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்சி உறையூர் 58- வது வார்டு டாக்டர் பங்கள் பகுதியில் சாக்கடையில் அதிகளவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் டாக்கர் ரோடு காமாட்சி அம்மன் கோவில் ரோடு, காசி விளங்கி மீன் மார்க்கெட் பகுதியில் தார்சாலை வசதி அமைத்து தர வேண்டும். மங்கள் நகர், லிங்கம் நகர், ஆர்.வி.எஸ. நகர் குழுமணி ரோடு பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், உறையூர்.

தரைப்பாலம் சரிசெய்யப்படுமா?

திருச்சி மாநகராட்சி 54-வார்டு கள்ளத்தெருவில் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகே சாக்கடைகள் செல்வதற்காக தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தின் மேல்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் உடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் தெரியாமல் அதில் விழுந்தால் காயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

செல்லத்துரை, திருச்சி.

அரசு பஸ் இயக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா துவரங்குறிச்சி இருந்து செந்துறை வரை கஞ்சநாயக்கன்பட்டி, கோட்டைப்பட்டி வழியாக மட்டுமே பஸ் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் செட்டியபட்டி தெற்கு எல்லைகாட்டுப்பட்டி, நல்லபிச்சம்பட்டி, தட்டாமடைபட்டி வழியாக செந்துறைக்கு பஸ் இதுநாள்வரை இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் 4 கிலோ மீட்டர் நடந்து வந்து பஸ்சில் செல்கின்றனர். முதியவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல இயலாமல் தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மருங்காபுரி

குடிநீர் வினியோகம் செய்ய கோரிக்கை

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம்,தொப்பம்பட்டி கிராமம் ஆளிபட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 10 நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆளிபட்டி.

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்

திருச்சி பெரிய மிளகுபாறையில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் சாலையில் ஏராளமான மாடுகள் காலை மற்றும் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றிதிரிகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சில நேரங்களில் மாடுகள் சாலையில் சண்டை போட்டு கொண்டு வாகனங்கள் மீது வந்து மோதிகிறது. இதனால் வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக கொள்கிறோம்.

பொதுமக்கள், திருச்சி.


Next Story