தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

மின்விளக்கு எரிகிறது

கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட இனயம் மணல் தெரு உள்ளது. இந்த பகுதியில் உள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் பல மாதங்களாக பழுதடைந்து எரியாமல் காணப்பட்டது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்விளக்கை மாற்றி புதிய விளக்கை பொருத்தி எரிய வைத்தனர். இதுபற்றி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தொிவித்தனர்.

-அப்துல் ரசாக், இனயம்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இறச்சகுளம் பஞ்சாயத்துக்குட்பட்ட அம்பலம்திருத்தி பகுதியில் உள்ள ஒரு தெருவில் 2 மின் கம்பங்கள் சாலையின் நடுவே அருகருகே உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்களை மாற்றி சாலை ஓரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விமல், இறச்சகுளம்.

விபத்து அபாயம்

பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட மார்த்தால் நடுத்தெரு உள்ளது. இந்த தெருவின் நுழைவுப்பகுதியில் கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்வதற்காக கான்கிரீட் தளம் உடைக்கப்பட்டது. ஆனால் இதுவரை சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கான்கிரீட் தளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகமது ரபீக், திட்டுவிளை.

சேதமடைந்த மின்கம்பம்

குளச்சல் நகராட்சிக்குட்பட்ட சாஸ்தான் கரை டிப்போ உள்ளது. இந்த டிப்போ பின்புறம் மின்கம்பம் ஒன்று சேதமடைந்து காணப்படுகிறது. கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி, புதிய கம்பத்தை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாஹிர், குளச்சல்.

குளம் தூர்வாரப்படுமா?

இறச்சகுளத்தில் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி பொதுமக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது பாசிகள் படர்ந்து, குப்பைகள் கொட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆறுமுகம், பூதப்பாண்டி.

தொற்று நோய் பரவும் அபாயம்

தோவாளை தாலுகா திருப்பதிசாரம் ஊராட்சிக்குட்பட்ட சீமான் நகர் உள்ளது. இந்த நகரின் கிழக்கு பக்கம் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும், துா்நாற்றம் வீசி, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் ஓடையை தூர்வாரி, கழிவுநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.சரவணன், திருப்பதிசாரம்.


Next Story