தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

சுகாதார சீர்கேடு

பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் அருகே புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்குள்ள சென்னை பஸ் நிறுத்தம் அருகே காலியாக இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்தில் இரவு நேரங்களில் பலர் சிறுநீர் கழித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்ட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

குப்பைகளை முறையாக வாங்க வேண்டும்

பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் குப்பைகள் வாங்க தூய்மை காவலர்கள் வராததாலும், குப்பை தொட்டிகள் இல்லாததால் பொதுமக்கள் தெருவில் ஆங்காங்கே குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் காற்றில் பறக்கும் குப்பைகள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் குப்பைகள் முறையாக வாங்குவதற்கும், அள்ளுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், எளம்பலூர்.

தடையின்றி கிடைக்கும் புகையிலை பொருட்கள்

பெரம்பலூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சில கடைகளில் மறைத்து வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தடையின்றி புகையிலை பொருட்கள் கிடைத்து வருவதால், அதனை பயன்படுத்துவோர் தொடர்ந்து பயன்படுத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

பாலப்பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வேப்பூரில் இருந்து புதுவேட்டக்குடி செல்லும் சாலையில் கருங்குளம் அருகே புதிதாக உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி கடந்த 6 மாதங்களாக மந்தமாக நடந்து வருகிறது. தற்போது அப்பகுதியில் மழை பெய்து வருவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே பாலப்பணிகளை விரைந்து முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், குன்னம்.

தேங்கி நிற்கும் மழைநீர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா குரூர் கிராமத்தில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் ஆங்காங்கே மழை தேங்கி நிற்கிறது. இதனால் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரங்களில் வாகனங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் சிக்கி கீழே விழுந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், குரூர்


Next Story