தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

குண்டும், குழியுமான சாலை

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே கழுமங்கலம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் பகுதியில் சாலை போடப்பட்ட 15 ஆண்டுகள் ஆகிறது. இதனால் தற்போது சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறத. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் மழை அதிகமாக பெய்து வருவதால் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், கழுமங்கலம்.

மயான கொட்டகை வேண்டும்

அரியலூர் மாவட்டம், முத்துசேர்வாமடம் கிராம் புதுக்காலனி தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள யாரேனும் இறந்தால் அவர்களை எரிப்பதற்கு மாயனா கொட்டகை இல்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், முத்துசேர்வாமடம்.


Next Story