தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பெட்டவாய்த்தலை ஊராட்சி வார்டு 4 மற்றும் 5 வார்டுகளில் சில நாட்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக மின்வாரிய அதிகாரிகள் பழுதான தெருவிளக்குகளை சரிசெய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், பெட்டவாய்த்தலை.

மழைநீருடன் வரும் விஷ பூச்சிகள்

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், மால்வாய் வடக்கு தெரு காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தற்போது பெய்த மழையால் தண்ணீருடன் பாம்பு உள்ளிட்ட விஷபூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மால்வாய்.

மூடப்படாத சாக்கடையால் துர்நாற்றம்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சாத்தாரவீதி, கீழ அடைஞ்சான் தெரு சந்திப்பு பகுதி பூக்கடை , காய்கறிதரைக்கடை உள்ள பகுதியில் மாநகராட்சி பணிக்காக சாக்கடை மேல் மூடப்பட்டு பாதுகாப்பாக இருந்த கற்களை அகற்றினர். இந்தநிலையில் பணி முடிந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை சாக்கடையை மூடவில்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பாலசுப்பிரமணியம், ஸ்ரீரங்கம்.

குண்டும், குழியுமாக மாறிய சாலை

திருச்சி மாநகராட்சி 39-வது வார்டில் புதியதாக தார்சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலையின் வழியாக பொன்லைன் மற்றும் கனகர வாகனங்கள் வந்ததால் சாலை சிதலமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

அப்துல்ரகுமான், காட்டூர்.

குடிநீர் வசதி வேண்டும்

திருச்சிமாவட்டம், அதவத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தப்புக்கொட்டிக்காடு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பிரவின் ராஜா, தப்புக்கொட்டிக்காடு.


Next Story