தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி மாவட்டம், இனாம் சமயபுரம் ஊராட்சிக்குட்டப்பட்ட சமயபுரம் டோல்பிளா அருகில் சாலைக்கு தென்புறம் மேற்கில் இருந்து கிழக்காக கழிவுநீர் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு பாதியிலேயே விடப்பட்டுள்ளது. இதனால் வடிகாலில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குப்பைகளுடன் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் வடிகால் வாய்க்காலை முழுமையாக கட்டி முடித்து கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
புகழேந்தி, சமயபுரம்.
கால்வாய் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?
திருச்சி விமான நிலையம் எதிர்புறம் வயர்லெஸ் சாலையில் கழிவுநீர் வடிகால் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் பள்ளம் தெரியாமல் கால் தவறி விழுந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது மழைக்காலம் தொடங்குவதால் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமலிங்கம், திருச்சி.
தெருவிளக்கு வேண்டும்
திருச்சி மாவட்டம், சங்கிலியாண்டபுரம் நாகம்பை தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் வெளியே செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இருள் சூழ்ந்து காணப்பவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்.
தேவராஜ், சங்கிலியாண்டபுரம்.
குடிநீர் தட்டுப்பாடு
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் நத்தம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மின்மோட்டார் பழுது காரணமாக கடந்த 2 வாரங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்த வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
அரவிந்த், நத்தம்
மின்கம்பியை உரசும் மரக்கிளைகள்
திருச்சி மாவட்டம், முசிறி அய்யம்பாளையம் ஸ்டோர்ஸ் தெருவில் மின் கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் செல்லும் மின்சார கம்பிகளில் மரக்கிளைகள் உரசி செல்கிறது. இதனால் எந்த நேரம் வேண்டுமானாலும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
சிராஜுதீன், முசிறி.