தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் வேண்டும்

கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகாவில் வட்டார வளர்ச்சி அலுவலகம், ,போக்குவரத்து பணிமனை, வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு பள்ளிகள் உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் மண்மங்கலத்திற்கு ஏராளமான வாகனங்கள் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து செல்கிறது. இதனால் எப்போதும் மண்மங்கலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. எனவே மண்மங்கலத்தில் மேம்பாலம் அமைத்து கொடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள். மண்மங்கலம்.

பயன்று கிடக்கும் பயணிகள் நிழற்குடை

கரூர் மாவட்டம், உப்பு பாளையம் பிரிவு அருகே கரூர் -ஈரோடு நெடுஞ்சாலையில் அப்பகுதி பொது மக்களின் நலன் கருதி பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு பஸ்சில் செல்லும்போது பஸ் வரும் வரை இந்த பயணிகள் நிழற்குடையில் அமர்ந்திருந்து சென்று வந்தனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக இந்த நிழற்குடை அருகே எந்த பஸ்சும் நிற்பதில்லை. இதனால் பயணிகள் நிழற்குடையில் யாரும் வந்து பஸ் ஏறிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பயணிகள் நிழல்குடை பயனற்று உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்கள் நின்ற செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், உப்புபாளையம்

சாலையோரம் குவிந்து கிடக்கும் கழிவுகள்

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் பகுதியில் மளிகை, காய்கறி, பேக்கரிகளில் இருந்து பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளையும், அழுகிய காய்களையும், கோழிக்கடைகளில் உள்ள கோழி கழிவுகளையும் , மருத்துவமனையில் உள்ள மருத்துவக்கழிகளையும் மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்து தார்சாலை ஓரத்தில் போட்டு செல்கின்றனர். இதனால் சாலையோரத்தில் மலைப்போல் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களை நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், புன்னம்சத்திரம்.

குடிநீர் பற்றாக்குறை

கரூர் மாவட்டம், புன்னம் ஊராட்சி பொன்னியாக் கவுண்டன்புதூர் எதிரே உள்ள பகுதியில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்களின் தேவையை பூர்த்தி வகையில் அங்கு மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 8 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குறைந்த அளவு தண்ணீர் வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், புன்னம்.

கால்வாயை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடையில் இருந்து நத்தமேடு செல்லும் தார் சாலை ஓரத்தில் நெடுகிலும் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்லும் வகையில் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இந்த கால்வாய் வழியாக விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்கிறது. அதேபோல் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரும் இந்த கால்வாய் வழியாகத்தான் செல்கிறது. இந்நிலையில் உபரி நீர் கால்வாயில் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து உபரி நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீரும் செல்ல முடியாமல் ஊருக்குள் உள்ள வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், நொய்யல்


Next Story