தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கால்நடைகளால் சுகாதார சீர்கேடு
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், குழவடையான் கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் உள்ள முன் பகுதியில் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கால்நடைகளை இரவு நேரங்களில் கட்டி சுகாதார கேடு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், குழவடையான்.
போக்குவரத்து நெரிசல்
அரியலூர் மார்க்கெட் பகுதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் முன்பு ஏராளமான பொருட்களை வைத்து ஆக்கிரமித்து செய்துள்ளனர். மேலும் கடைகளின் முன்பு ஆங்காங்கே ஏராளமான சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சாலையை மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிேறாம்.
பொதுமக்கள், அரியலூர்.
நாய்கள் தொல்லை
அரியலூர் மாவட்டம், பாடாலூர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் சாலைகளில் வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், பாடாலூர்.
உயர் மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டும்
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இரவு நேரங்களில் வெளி ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கடைவீதியில் காத்து கிடக்கின்றனர். இதனால் கடைவீதி பகுதியில் உயர் மின்கோபுர விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
சரவணன், மீன்சுருட்டி.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் காட்டகரம் வீரபோகம் கிராமத்திற்கு செல்லும் சாலையோரத்தில் சிலர் விறகு மற்றும் கட்டைகளை போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், உடையாார்பாளையம்