தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
பெரம்பலூர் மாவட்டம், கொட்டரை கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து கூருகின்றனர். இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவிவருகிறது. இதனால் இங்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்களை பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், கொட்டரை
குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வருமா?
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா,நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு குடிநீர் தொட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த தொட்டி பழுதடைந்து உள்ளதால் தண்ணீர் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், நட்டார்மங்கலம்.
மது விற்பனையை தடுக்க வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம், கூடலூர், திம்மூர், ஆதனூர், கூத்தூர், பிலிமிசை கிராமங்கள் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் மதுபிரியர்கள் குடித்து விட்டு பாட்டில்களை சாலையில் உடைத்து சென்று விடுகின்றனர். மேலும் மது விற்பனையால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், கூடலூர்.
புதர்மண்டிய வாரச்சந்தை
பெரம்பலூர் உழவர் சந்தை அருகே வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் மது அருந்துதல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடந்து வருகின்றன. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதர்மண்டி காணப்படும் இடத்தை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
மின்விளக்குகளை சரிசெய்ய கோரிக்கை
பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு ரோடு கீழ் பாலத்தின் வழியாக இரவு நேரங்களில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் பயணிகளின் நலன்கள் கருதி பாலத்தினுள் 2 மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக 2 மின்விளக்குகளும் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் சாலையில் மேடு, பள்ளங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், செங்குணம்.